இயற்கை அனர்த்தம்...உயிரிழப்பு 146 ஆக உயர்வு, 112 பேரை காணவில்லை முள்ளிநியூஸ்

இயற்கை அனர்த்தம்...உயிரிழப்பு 146 ஆக உயர்வு, 112 பேரை காணவில்லை



வெள்ள அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று -28- நண்பகல் வரையில் கிடைத்த தகவல்களுக்கு மத்திய நிலையத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அறிக்கைக்கு அமைய 15 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 114,124 குடும்பங்களை சேர்ந்த 442,299 பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தின் காரணமாக 146 பேர் உயிரிழந்துள்ளதுடன், 112 பேர் காணாமல் போயுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 24,603 குடும்பங்களை சேர்ந்த 101,638 பேர் 319 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW