UNP யின் 3 முக்கியஸ்தர்கள், அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மூன்று பேர் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சரவை மாற்றத்தில் தாம் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்தால், ஆளும் கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் விலகிக் கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவசரமாக மேற்கொள்ளும் அமைச்சரவை மாற்றத்தினை எதிர்ப்பதாக கட்சித் தலைமையகத்திற்கு உத்தியோகப்பற்றற்ற வகையில் இவர்கள் அறிவித்துள்ளனர்.
சீன விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்பியதும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த குறித்த அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.