விபத்தில் 19 வயது இளைஞர் பலி; சாரதி தப்பி ஓட்டம்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்பை - உடப்பு பிரதான வீதியின் மணிகாரன் பாதையில் பெருக்குவட்டான பகுயில் நேற்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
உடப்பு திசையிலிருந்து கரம்பை திசையை நோக்கிச் வந்த சிறிய ரக கெப் வாகனமும் கரம்பை திசையிலிருந்து கொத்தாந்தீவு நோக்கிச் வந்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு விபத்தில் கொத்தாந்தீவு-கொலனியைச் சேர்ந்த 19 வயதுடைய முகமட் சப்ரான் என்ற இளைஞர் ஸ்தலத்திலேயே உயிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதணை இன்று (21) மேற்கொள்ளப்படவுள்ளதாக, புத்தளம் பிரிவுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிசாம் தெரிவித்தார்.
விபத்துடன் தொடர்புடைய சிறிய கெப் ரக வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

