3 ராணுவ உயரதிகாரிகள் கைது
வெள்ளிக்கிழமை, சவுதி அரேபியாவின் கடற்பரப்பிலுள்ள மார்ஜான் எண்ணெய் வயலை நெருங்கி வந்த ஒரு படகில் ஈரான் படையின் உயரதிகாரிகள் இருந்தனர் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
மூன்று படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் வயல் மீதான தீவிரவாத தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததாக சவுதி செய்தி நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.
அலைகளால் ஒரு எண்ணெய் வயலை நோக்கி அடித்துச் செல்லப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகள் மீது, சவுதி எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாக ஈரானிய ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தனர்