மஹிந்தவின் பாதையில் செல்லாதீர்: மைத்ரிக்கு டிலான் எச்சரிக்கை! முள்ளிநியூஸ்

மஹிந்தவின் பாதையில் செல்லாதீர்: மைத்ரிக்கு டிலான் எச்சரிக்கை!



பொது பல சேனாவை அருகில் வைத்துக் கொண்டு அவ்வமைப்பின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு இயங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்ற அதே பாதையில் மைத்ரிபால சிறிசேனவும் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார் அமைச்சர் டிலான் பெரேரா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் பண்ணுங்கள்
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள ஞானசார தொடர்ந்தும் நீதித்துறையை அவமதித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்நிலை தொடர்வது இவ்வரசுக்கும் நல்லதில்லையென்பதோடு மஹிந்த செய்த அதே பிழையை மைத்ரியும் செய்ய வேண்டாம் எனவும் பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாக சோனகர்.கொம் செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW