சம்பூர், மூதூர், இறால்குழி, கிண்ணியா, கட்டையாறு பகுதி 40 மீனவர்கள் கைது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் பண்ணுங்கள்
திருகோணமலையில் தடைசெய்யப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்; 40 மீனவர்கள் சனிக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மீனவர்களைக் கைதுசெய்த கடற்படையினர், திருகோணமலை மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பூர், மூதூர், இறால்குழி, கிண்ணியா, கட்டையாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்த மீனவர்கள், தடைசெய்யப்பட்ட கடற்பரப்பில் மூன்று கிலோமீற்றருக்கு அப்பால் சென்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மீனவர்களிடமிருந்து ராடர் கருவிகள், தடைசெய்யப்பட்ட வலைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் கூறினர்.