இளம் பெண் கத்தியால் குத்தி கொலை. காதலன் கத்தியுடன் சரண். முள்ளிநியூஸ்

இளம் பெண் கத்தியால் குத்தி கொலை. காதலன் கத்தியுடன் சரண்.


நுகேகொட பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பழைய கெஸ்பேவ வீதி சூரியமல் மாவத்தையில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் காதலரினால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு கெஸ்பேவ பழைய வீதிக்கு அழைத்து சென்ற காதலன், அங்கு வைத்து கொலை செய்துள்ளார்.

மத்துகம, ஹெவெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த பிரியங்கா சங்கல்பத்தி குணசிங்க என்ற இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது சடலம் இதுவரையில் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW