திருமணம் செய்து கொண்ட இரத்த உறவு சகோதரர்கள் கைது!

கேகாலைப் பகுதியில் திருமணம் செய்து கொண்ட உடன் பிறந்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணம் செய்த நிலையில் மறைந்திருந்த இருவருமே நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்துடன் தொடர்புடைய 21 வயதான பெண் களனி பிரதேசத்திலுள்ள வளர்ப்பு பெற்றோரிடம் வளர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண்ணின் சகோதரனால் அவர் தேடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இருவரும் சகோதரர்கள் என்பதால் வளர்ப்பு பெற்றோர்கள் அவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்காத நிலையில் இருவரும் பல இடங்களுக்கு சுதந்திரமாக சென்று வந்துள்ளனர்.
எனினும் சில தினங்களுக்கு முன்பு வெளியில் சென்ற இருவரும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் இது தொடர்பில் வளர்ப்பு பெற்றோர் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இவர்கள் இரும் கேகாலையின் கிராம பகுதியொன்றில் திருமணம் செய்த நிலையில் மறைந்திருந்த போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.