கிண்ணியா பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல். முள்ளிநியூஸ்

கிண்ணியா பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கல்வீச்சுத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக பஸ் ஓட்டுனர் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இருந்து கொழும்பு சென்று வரும் வழியில் கலேவெல கலதிரிய அன்மித்த பகுதியில் இனம் தெறியாத நபர் ஒருவரால் இன்று (11) காலை 1:30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது..

இத்தாக்குதலில் பஸ்ஸில் பயனித்த பயணிகளுக்கு எவ்வித சேதமும் ஏற்ப படவில்லை எனவு அறியக்கிடைத்தன.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இத்தாக்கு தலுக்கு உள்ளது எனவும் தாக்கு்குதலினால் கண்ணாடி சேதமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக உடனடியாக கலேவெல பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW