மணல் கொள்ளையால் விவசாய நிலங்கள் பாதிப்பு மக்கள் விசனம் முள்ளிநியூஸ்

மணல் கொள்ளையால் விவசாய நிலங்கள் பாதிப்பு மக்கள் விசனம்


மணல் அகழ்வு தொடர்பில் அண்மைக்காலமாக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உப்பாறு கிண்ணியா.சேருவெல. பிரிவில் இரண்டு இடங்களில் இவ்வாறு அகழப் படுகின்றது.

மகாவலி ஆற்றுப் பகுதியான இறால்குழி , படுகாடு பிரதேசத்திலும், சின்னவெளி, கீரைத்தீவு, கொய்யாம்புளி, சாவாறு பிரதேசத்திலும் அகழ்வு நடைபெறுகின்றது.

சுமார் 06 கிலோ மீட்டர் தூரத்திற்கு மகாவெலி மற்றும் உப்பாறு கிளையாற்றில் இந்த அகழ்வு இடம் பெறுகின்றது.

இதனால் கண்டல் காடு, தீனேரி பிரதேச வயல் நிலங்கள் பாதிப்படைகின்றது.
சம்பூர், கண்டல்காடு வீதி சேதமடைந்துள்ளது.

ஆறுகளின் இரு மரங்கும் மோசமாக சேதமாக்கப் பட்டுள்ளது.

மணல் விவசாய நிலத்தில் களஞ்சியப் படுத்தப் படுவதினால் விவசாயம் கைவிடப் படும் நிலை..
சுற்றாடல் பாதிப்பு...
இன்னும் எத்தனையோ...
தீர்வாக இதனை முறையாக திட்டமிட்டு கட்டுப்படுத்த வேண்டும்.

இல்லாதவிடத்து பாரிய இழப்பை நாம் சந்திப்போம்.அரசியல் வாதிகள் இருந்தும் ஆதரவு இல்லை பாராளமண்ட உறுப்பினர்கள் இருந்தும் இல்லாதது போல் காணப் படுகின்றது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW