முள்ளிப்பொத்தானை பரதி பாஞ்சான் குளத்தில் வல்லம் கவிழ்ந்து ஒருவர் மரணம் முள்ளிநியூஸ்

முள்ளிப்பொத்தானை பரதி பாஞ்சான் குளத்தில் வல்லம் கவிழ்ந்து ஒருவர் மரணம்



தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பரதி பாஞ்சான் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற எட்டாம் குளனியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை நாகூரான் நஜீமுதீன் என்பவரே வல்லம் கவிழ்ந்து  மரணித்துள்ளார்.

இன்று (14) திகதி 3:30 மணியளவில் மீன் பிடிக்கச் சென்ற போது தோணி கவிழ்ந்த சந்தர்ப்பத்தில் அதில் மூன்று பேர் பயணித்துள்ளனர் அதில் இருந்த   வயதானவரை காப்பாற்றி விட்டு தன் உயிரை காப்பாற்ற முயற்சிச் செய்தும் முடியாமல் உயிர் துரந்து விட்டார்.

இவரது உடலை 6:00 மணியளவில் தான் குளத்தில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன மற்றும் தம்பலகாமம் பொலிஸார் வரவைக்கப் பட்டு உடனடியாக பிரதப் பரிசோதனைக்கு கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸ்சார்  மேற்க்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW