செங்கடல் தீவுகள் இரண்டை சவுதியிடம் கையளிக்கிறது எகிப்து
செங்கடலில் அமைந்துள்ள டிரான் மற்றும் சனபிர் என அறியப்படும் இரு தீவுகளை சவுதி அரேபியாவிடம் கையளிக்கிறது எகிப்து.
கடந்த வருடம் சவுதி மன்னர் சல்மானின் எகிப்து விஜயத்தின் போது இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த அதேவேளை கடந்த வாரம் எகிப்திய நாடாளுமன்றம் இதற்கு அனுமதியளித்துள்ளதன் பின்னணியில் எகிப்திய ஜனாதிபதி சிசி அதற்கான நடவடிக்கையை மெற்கொண்டுள்ளார்.
குறித்த தீவுகள் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமானது எனவும் 1950களில் அங்கு எகிப்திய இராணுவம் சவுதியின் கோரிக்கை அடிப்படையிலேயே நிலை கொண்டது என சிசி விளக்கமளித்துள்ள அதேவேளை அவை எகிப்துக்கே சொந்தமெனவும் தீவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் உள்நாட்டில் எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.