மல்லிகைத்தீவு விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் எட்டு வயதுடைய சிறுமிகள் மூவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய விவகாரத்தில் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் இன்று(5) உத்தரவிட்டார்.
பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மூன்று சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் தெரிவித்து பெற்றோர்களினால் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மூதூர் நகரில் கடந்த திங்கட்கிழமை (29) கைதுசெய்யப்பட்ட அடையாள அணிவகுப்பு ஐந்து சந்தேக நபர்களையும் இன்று(5) மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார் .
இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டதோடு கவயீர்ப்பு போராட்டங்களிலும் மாணவர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.