காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை. முள்ளிநியூஸ்

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை.


காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.

தாருல் அதரின் பிரச்சாரகர் மெளலவி பீ.எம். அஸ்பர் (பலாஹி) பெருநாள் தொழுகையை நடாத்தி பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.

சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் அயல் கிராமங்களில் இருந்தும் பலரும் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW