ஞானசாரவை ‘சம்பிக்க’வின் வீட்டில் தேடுங்கள்: திஸ்ஸ விதாரன

நான்கு விசேட பொலிஸ் அணிகளைக் களமிறக்கியும் கைது செய்ய முடியாத அளவு ஞானசார எங்கே ஒளிந்திருக்கிறார் என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமில்லையென தெரிவித்துள்ளார் கூட்டு எதிர்க்கட்சி பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரன.
பொலிசார் முதலில் சம்பிக்கவின் வீட்டிலிருந்தே தேடல் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், வடக்கிலும் கிழக்கிலும் இனவாதிகளை வளர விட்டு அரசாங்கம் மௌனித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.