குழு மோதலில் ‘கைக்குண்டு’ வீச்சு: 17 பேர் காயம்! முள்ளிநியூஸ்

குழு மோதலில் ‘கைக்குண்டு’ வீச்சு: 17 பேர் காயம்!



File photo

அக்குனுகொலபெலஸ்ஸ, வெட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையிலான மோதல் ஒன்றின் போது கைக்குண்டு வீச்சு இடம்பெற்று அதனால் 17 பேர் காயமுற்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரு குடும்பங்களுக்கிடையில் இருந்த நீண்டகால பகையிலேயே இம்மோதல் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிசாரின் விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாகவும் அயலவர்களும் வெளியில் கூடியிருந்த நிலையில் கைக்குண்டு வெடித்ததால் இவ்வாறு 17 பேர் காயமுற்று அதில் 13 பேர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் மூவர் தங்கல்ல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW