ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பலி
தற்கொலைப் படை தாக்குதல் நடந்த பகுதி | படம்: ராய்ட்டர்ஸ்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த கார் குண்டு வெடிப்பு தற்கொலைப் படை தாக்குதலில் 24 பேர் பலியாகினர். 42 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “காபூலில் அரசு பணியாளர்களை எற்றி வந்த பேருந்து மீது வெடிகுண்டு நிரப்பிய கார் ஒன்று மோதியதில் 24 பேர் பலியாகினர். 42 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தற்கொலைப்படை தாக்குதல் ஆப்கானிஸ்தானின் முக்கிய அரசியல்வாதியாக உள்ள முகமத் முககுக் இல்லத்தின் அருகே நிகழ்ந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தாலீபன்கள் நிகழ்த்தியிருக்கலாம் என்று ஆப்கன் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாக்கப்படும் நகரம் காபூல்தான் என்று ஐ. நா கூறியிருந்த நிலையில் மீண்டும் தீவிரவாதிகள் காபூலில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர்.