சுட்டவர் அடையாளம் காணப்பட்டார் முள்ளிநியூஸ்

சுட்டவர் அடையாளம் காணப்பட்டார்



யாழ்.நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படுவாரெனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நல்லூர் பின் வீதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை 5.10 மணிக்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதில் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததுடன் , மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடுச் நடத்திய துப்பாக்கிதாரியை நாம் அடையாளம் கண்டுள்ளோம். துப்பாக்கிதாரி புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். அவர் மீது கொலை வழக்கு ஒன்று நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அனலைதீவை சேர்ந்தவர்கள் கைது

இதேவேளை சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும்
சந்தேகத்தில் அந்த இடத்தில் வைத்து அனலைதீவைச் சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தப்பிச் சென்ற ஆயுததாரியும் உறவினர்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW