முல்லைத்தீவு சிங்கள வித்தியாலயத்தில் வெடிப்புச் சம்பவம் - 8 மாணவர்கள் காயம் முள்ளிநியூஸ்

முல்லைத்தீவு சிங்கள வித்தியாலயத்தில் வெடிப்புச் சம்பவம் - 8 மாணவர்கள் காயம்


முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவார பகுதியில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் அப் பாடசாலையில் கல்விபயிலும் 8 மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று -18- காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாடசாலை வளவினுள் உள்ள குப்பை மேடு ஒன்றுக்கு நெருப்பு வைத்த சந்தர்ப்பத்திலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

“டைனமைட்” ரக வெடிபொருள் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கும் முல்லைத்தீவு பொலிஸார் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW