எந்த வகையான ‘அதிர்ச்சிக்கும்’ தயார்: கட்டார்
சவுதி கூட்டணி நாடுகள் கட்டாருக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் தம்மிடம் போதியளவு ‘பணம்’ கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளர் கட்டார் மத்திய வங்கி.
நாட்டின் பொருளாதாரம் உறுதியான நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி 340 பில்லியன் டொலர் மேலதிகமாக கையிருப்பில் உள்ளதாகவும் எந்த வகையான அதிர்ச்சியையும் எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரம் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் விஜயத்தோடு ஆரம்பமான மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான சர்ச்சையைத் ‘தீர்த்து’ வைக்க அமெரிக்க ராஜாங்க செயலாளர் இன்று குவைத் மற்றும் கட்டாருக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.