நாற்பது வருடங்களாக நாடாளுமன்றில் நிலைத்திருக்கும் ரணில்! முள்ளிநியூஸ்

நாற்பது வருடங்களாக நாடாளுமன்றில் நிலைத்திருக்கும் ரணில்!



1977ம் ஆண்டு, ஜுலை 21ம் திகதி பியகம தொகுதியிலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவானதிலிருந்து தொடர்ச்சியாக நாற்பது வருடங்கள் நாடாளுமன்றில் நிலைத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்காக விசேட சமய வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளை 23ம் தகிதி களனியிலும் 25ம் திகதி கொகிலவத்தையிலும் ஓகஸ்ட் 5ம் தகிதி காலிமுகத்திடலில் கேளிக்கை நிகழ்வும் ஓகஸ்ட் 15ம் தகிதி தலதா மாளிகையில் சமய நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஜே.ஆர் அரசில் இளவயதில் அமைச்சரான பெருமையைப் பெற்ற ரணில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதுடன் 2015ம் ஆண்டும் மீண்டும் தலைமைத்துவ ஆளுமையை மீள நிறுவி கடந்த இரு வருடங்களாக பிரதமராகப் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW