ஸ்ரீலங்கா பொலிஸ் யாருடைய ஆளுமைக்குள்ளும் இல்லை: பூஜித
ஸ்ரீலங்கா பொலிஸ் சுயாதீனமாக இயங்கி வருவதாகவும் யாருடைய ஆளுமையும், பாதிப்பும் இல்லையனெவும் தெரிவித்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர.
இடமாற்றம், பதவியுயர்வு போன்றவை முன்னர் போன்றில்லாது சட்டவரைபுகளுக்குட்பட்டே இடம்பெறுவதாகவும் ஸ்ரீலங்கா பொலிஸ் சுயாதீனமாக இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதி ஞானசார தலைமறைவாக இருந்த போது நான்கு விசேட அணிகளைக் களமிறக்கியும் அவரைப் பிடிக்க முடியாது போனதோடு மகாநாயக்கர்களின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டு பிணை பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.