முதலமைச்சரும் உறுப்பினர்களும் அதிகமான திருகோணமலை மாவட்டம் முள்ளிநியூஸ்

முதலமைச்சரும் உறுப்பினர்களும் அதிகமான திருகோணமலை மாவட்டம்



ஆளுக்கொரு கணிப்பீடும் தேர்தல் ஆணையமும் நமது ஊருக்கு மட்டுமே வெற்றிக்காக இருப்பது போன்ற கருத்துக்கள் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கூறப்படுகிறது.உண்மையில் தேர்தல் இருக்கின்ற விகிதாசார முறையிலா அல்லது புதிய முறையிலா என்ற குளறுபடி ஒருபுறம் இருக்க,தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்குறி மேலாதிக்கம் செலுத்துகிறது.

அந்தவகையில் கடந்தகாலங்களைவிட திருகோணமலை மாவட்டம்,இருக்கின்ற விகிதாசார முறையின்கீழ் நடைபெற்றால் இம்முறை முஸ்லீம்களுக்கு பாரிய சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறது.

ஆகவே தங்களுக்கு 2;3 ஆசனம் மற்றும் முதலமைச்சர் பதவி பதவி என்று சிறுபிள்ளைத்தனமாகவும் அறிவற்றதனமாக சில படித்தவர்களும் முகநூளில் பதிவிடுவது வேடிக்கையாக உள்ளது.

ஆகவே திருகோணமலை மாவட்ட தேர்தல் நிலவரம் பின்வரும் தகவல்களை மையப்படுத்தி நோக்கப்படுதல் அர்த்தமாக இருக்கும்.

1)விகிதாசாரத் தேர்தல் முறையில் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகள் மற்றும் விகிதாசார தரப்படுத்தல் அடிப்படையிலே ஆசனங்கள் ஒதுக்கப்படும்.அதன்படி முதனிலையாக கட்சி 4 ஆசனங்கள் பெற்றால் 4ம் நபர் 1000வாக்குகள் பெற்றாலும் உறுப்பினராகலாம்.

2)தரப்படுத்தலின்படி கட்சிகளுக்கு அடுத்தடுத்து 2அல்லது 1 ஆசனம் ஒதுக்கப்படும்.அதன்படி கட்சிக்கு 1 ஆசனம் கிடைத்தால் இரண்டாவது நபர் 2000வாக்குகள் பெற்றாலும் உறுப்பினராக முடியாது.

3)மாவட்டத்தில் UNP அல்லது PAஉடன் சிறுபான்மை கட்சிகள் போட்டியிட்டால் மட்டுமே முன்னிலை வகிக்கும்.அதிலும் PAஇன் சிங்களவாக்கு வாங்கியே அதிகமாக உள்ளது.இவர்களுடன் SLMC? ACMC? கூட்டமைப்பது யார்?

4)ACMC மற்றும் SLMC கூட்டணி அமைத்தால் நிச்சயம் குறைந்த பட்சம் 3 உறுப்பினர்களை நிறுத்தும்.

5)கிண்ணியாவில் SLMC ஒரளவு செல்வாக்காக இருந்தாலும் ACMC மாவட்டத்தில் ஓரளவேனும் வளர்ந்துள்ளது முஸ்லீம் வாக்குகளை மேலும் கூறுபோடும்.

6)ACMC மற்றும் SLMC போடுகின்ற குறைந்த பட்சம் 6 உறுப்பினர்களோடு UNP மற்றும் PA போடுகின்ற 6 முஸ்லீம் உறுப்பினர்களுடன் போதாக் குறைக்கு மஹிந்த அணியிலும் முஸ்லீம்கள் களமிறங்குவர்.இந்த வகையில் மொத்தமாக 12-14முஸ்லீம் வேட்பாளர்கள்.இதில் 7-9 வரையில் கிண்ணியாவைச் சேர்ந்தவர்கள்.

7)சிங்களவர்கள் UNP,PA ல் 6 பேரும் மற்றும் மஹிந்த அணியில் ஆகக்கூடியது 4பேரும் இருக்கலாம்.

8)கடந்த தேர்தலில் முஸ்லீம் முதலமைச்சர் கோஷத்தை எழுப்பி வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்ற SLMC இறுதியில் மஹிந்தவின் பணம் மற்றும் பதவிக்காக சோரம்போனதை மக்கள் மறக்கவில்லை.இந்தமுறை பலமான முஸ்லீம் கூட்டணியின் தாக்கம் மூதூர் முஸ்லீம்களின் பதிலடி சேர்ந்து SLMC ஆசனத்தை ஒருபோதும் அதிகரிக்காது.இந்த நிலையில் SLMC முஸ்லீம் முதலமைச்சர் என்ற பேச்சுக்கு சந்தர்ப்பம் கடினமாகும்.அத்துடன் TNA இந்தமுறை விட்டுக் கொடுக்காது.

9)மேலும் 4வது இடத்தைப் பெறும் கட்சி/சுயேட்சையின் 1ஆசனம் 3வது கட்சி குறித்த விகிதாசாரத்திற்குள் வாக்குகளைப் பெறாதபோது இழக்கின்ற இரண்டாவது ஆசனம் மூலம் மட்டுமே நிச்சயமாகும்.இதன்படி 4வது கட்சி/சுயேட்சைக்கான 1ஆசனம் 5000குறைவாக வாக்குகளை பெற்றாலும் கிடைக்கலாம்.அதேநேரம் இரண்டாவது ஆசனம் 3வது கட்சிக்கு கிடைத்தால் 5000கு அதிகமாக வாக்குகள் கிடைத்தாலும் 4வது இடத்தைப் பெறும் கட்சி/சுயேட்சைக்கு கிடைக்கமாட்டாது.

10)அத்துடன் SLMC திருகோணமலையில் தனித்துப் போட்டியிட்டாலும் கூட்டாக போட்டியிட்டாலும் சின்னதௌபீக் போட்டியிடுவதுடன் மூதூர் மக்கள் வாக்களிப்பதன் மூலம் மட்டுமே அதிகூடிய 1:2ஆசனத்தைப் பெறலாம்.

11) SLMC மற்றும் ACMC நிச்சயம் வேறாகப் பிரிந்து UNP மற்றும் PA உடனே கேட்பார்கள்.ஆகவே முஸ்லீம்களின் வாக்குகள் கடந்தகாலத்தை விட மேலும் சிதைவடையும்.

12)ACMC மற்றும் SLMC கட்சிகளுக்கு தனியாக போட்டியிட்டு வெற்றியீட்டுக் காட்டும் தைரியம் இல்லை.

13) அத்துடன் SLMC கட்சியில் மூதூர் உள் தலைவர்கள் சின்னதௌபீக் V பாயிஷ் மோதல்.லாஹிர் v அன்வர் v கணக்காளர் பாயிஸ் மோதல்
ACMC கட்சியில் மக்ரூப் V ஹில்மி மக்ரூப் மோதல் விருப்பு வாக்குகளை குறைக்கலாம்.இது இவர்கள் கூட்டமைத்து கேட்கின்ற சிங்கள வேட்பாளர்களுக்கு தரப்படுத்தலில் முதன்மையாக வழியமைக்கும்.

அதன்படி ஆசனங்களும் வெற்றிவாய்ப்புகளும் விகிதாசாரத் தேர்தல் முறையின் தரப்படுத்தல் மற்றும் கூட்டணிகளைப் பொறுத்தே தர்மானிக்கப்படும்.

ஆகவே வெறுமனே கட்சி மற்றும் தனிப்பட்டவர்கள் மீதுள்ள குருட்டுத்தனமான வெறித்தனத்தால் யதார்த்தத்தை மறைக்க முற்படவேண்டாம்.ஏனெனில் சரியான வழிகாட்டுதல்களை ஆதாரபூர்வமாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தேர்தல் அறிவித்ததும் மேலதிக புள்ளிவிபரங்களுடன் தகவல்கள் வழங்கப்படும்.

Fahmy Mohideen
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW