இலங்கையின் மருத்துவ வரலாற்றில் அசத்தல் சாதனை. மரணமடைந்தவரின் கால் இன்னொருவருக்கு பொருத்தப்பட்டது. முள்ளிநியூஸ்

இலங்கையின் மருத்துவ வரலாற்றில் அசத்தல் சாதனை. மரணமடைந்தவரின் கால் இன்னொருவருக்கு பொருத்தப்பட்டது.


மூளையில் ஏற்பட்ட தாக்கத் தினால் மரணித்த ஒருவரின் காலொன்றை இன்னொருவருக் குப் பொருத்தி இலங்கையின் மருத்துவ வரலாற்றில் முதன் முதலாக சாதனை படைக்கப்பட்ட சம்பவமொன்று அனுராதபுர போதனை வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.

தற்போது 10க்குக் குறைவான இத்தகைய சத்திர சிகிச்சைகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வரலாற்றுச் சாதனை குறித்து மேற்படி வைத்தியசாலையின் இரத்தக் குழாய் மற்றும் மாற்று சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் ஜொயல் அருட் செல்வம் தெரி விக்கையில்,

ஒரு வருட காலத்திற்கு முன்னர் விபத்தொன்றின் விளைவாக 32 வயதுடைய நபரொருவாரின் கால்துண்டிக்கப்பட்டது.

அதேவேளையில், மூளையில் ஏற்பட்ட தாக்கத்தினால் மரணம டைந்த 52 வயதான நபரின் கால் அவரது குடும்பத்தாரின் சம்மதத் தின் பேரில் குறித்த இளைஞனுக்கு நீண்டநேர சத்திர சிகிச்சையொன் றின் பின்னர் தங்களால் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதெனக் கூறினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW