வசீம் கொலை; மஹிந்தவின் மனைவி – மகனுக்கு சி.ஐ.டி அழைப்பாணை!
வசீம் தாஜுதீன் கொலை விவகார விசாரணைக்கு சமூகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி மற்றும் அவரது புதல்வர் யோசித்தவுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.
இதனடிப்படையில் நாளை மறுதினம் ஷிரந்தி விசாரணைக்குட்படுத்தப்படுவதோடு அதற்கு மறுநாள் யோசித்த விசாரிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தேக நபர் ஒருவர் அரச சாட்சியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் நாமல் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் அதனை நாமல் மறுத்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
உள்ளூராட்சித் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மீண்டும் அரசியல் களம் சூடு பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.