கந்தளாயிலும் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பு
யாழ். மேல் நீதி மன்ற நீதிபதி மா.இஞ்செழியனை இலக்கு வைத்து அன்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை கண்டித்து இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் சங்கம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தின் போது உயிரிழந்த நீதிபதி அவர்களின் மெய்பாதுகாவலருக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறக் கூடாதென்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேவண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.