புத்தர் சிலையைத் திருட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!
விகாரையொன்றில் புத்தர் சிலை மற்றும் புராதன இரத்தினக் கற்களைத் திருட வந்தவர்கள் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
மீகலேவ, லஸ்ஸனகம பகுதி விகாரையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்களை மறித்து சோதித்துக் கொண்டிருந்த போது முதலில் தம் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதற்குப் பதிலீடாகவே தாம் திருப்பிச் சுட்டதாகவும், காயமுற்றிருந்த சந்தேக நபர்களுள் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.