(படங்கள்) கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை ஏற்றிச்சென்ற வாகனம் யாழில் விபத்துக்குள்ளானது. முள்ளிநியூஸ்

(படங்கள்) கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை ஏற்றிச்சென்ற வாகனம் யாழில் விபத்துக்குள்ளானது.


-பாறுக் ஷிஹான்-

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க யாழ் ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில் இன்று(16) காலை 6 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 25 திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிதரன் தப்பிச் செல்வதற்கு உதவியதாக வடக்கு மாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணையின் பின்னர் நேற்று மதியம் அவர் கைது கொழும்பில் வைத்து செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதன் போது யாழ் ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில் இன்று(16) காலை 6 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 25 திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நேற்றிரவு யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்த போது சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவை அழைத்து சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

எனினும் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் அதிலிருந்த இருவர் சிறு காயமடைந்ததாக தெரியவருகின்றது.

தற்போது அவர் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW