கண்டி வத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி. முள்ளிநியூஸ்

கண்டி வத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி.

0101.jpg
(படம் : அடையாலப்படம் )
( மொஹொமட் ஆஸிக்)

கண்டி வத்தேகம நகரில் நேற்று 15 ம் திகதி அதிகலை இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளாகி வத்தேகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வத்துகாம பொலீஸார் தெரிவித்தனர்.

நேற்று 15 ம் திகதி அதிகாலை ஒரு மணி அளவில் வத்துகாமம் மாத்தளை வீதியில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதுடன் விபத்து காரணமாக முச்சக்கர வண்டியின் சாரதியும் அதன் பின்னால் அமர்ந்துசெனறவரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்னர்.

முச்சக்கர வணடியின் பின்னால்அமர்ந்து சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள்ர்.

முச்சக்கர வண்டியின் சாரதி மேலும் வத்துகாம வைத்திய சாலையில் சிகிற்சை பெற்று வருகின்றார்.

தேவைப்படும் பட்சரை கண்டி போதனா வைத்திய சாலைக்கு மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக வைத்திய சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் வத்துகாமம் இஹல யட்டவர பிரதேசத்தை சேர்ந்த வெலே கெதர சனத் ரோஹன என்ற 42 வயதுடையவராவார்.

வத்துகாம பொலீஸார் இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை நடாத்துகின்றனர்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW