கண்டி வைத்தியசாலையில் ‘இதய மாற்று அறுவை சிகிச்சை’ வெற்றி!

அநுராதபுரத்தைச் சேர்ந்த 34 வயது பெண்ணொருவருக்கு கண்டி பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூளை செயலிழந்த நிலையில் இருந்த 24 வயது இளைஞன் ஒருவரின் இதயத்தை 34 வயது பெண்ணொருவருக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதன் பின்னணியில் இவ்வறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு குறித்த இளைஞனின் சிறுநீரகங்களும் அறுவைச் சிகிச்சை மூலம் குறித்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறான அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளமை இதுவே முதற்தடவையெனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.