கட்டார் முறுகல்: சமரச முயற்சியில் களமிறங்கியுள்ள UK! முள்ளிநியூஸ்

கட்டார் முறுகல்: சமரச முயற்சியில் களமிறங்கியுள்ள UK!


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மத்திய கிழக்கு விஜயத்தின் பின் அங்கு அரபு நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள பிணக்குகளைத் தீர்த்து வைக்க குவைத் பெரும் முயற்சியெடுத்து வருகின்ற நிலையில் இவ்விவகாரத்தில் ஐக்கிய இராச்சியமும் தலையிட்டுள்ளது.

ஐக்கிய இராச்சிய வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் இதன் பின்னணியில் குவைத் சென்று பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதுடன் தற்போது தோஹா சென்றுள்ளதுடன் கட்டார் அமீரை இது தொடர்பில் சந்தித்துப் பேசவுள்ளார்.

அமெரிக்க ராஜாங்க செயலாளரின் வரவும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் கடந்த புதன் கிழமை கய்ரோவில் இடம்பெற்ற சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகளின் கூட்டத்தின் பின்னரும் நிலைமை விரிசலடைந்து வருகின்றமையும் இவ்விவகாரம் தீர பல மாதங்களாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW