கந்தளாய் ரஜ- எல கிராம சேவகர் பிரிவில் இரண்டு வீதிகள் காங்கிரட் கல் வீதியாக புனரமைப்பு- Dr.அருண சிறிசேன- mpc

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அர்களின் வழிகாட்டளுக்கமைய செயல்படுத்தப்படும் "கிராமப்புற உள்வீதிகளின் அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ்" கந்தளாய் ரஜ- எல கிராம சேவகர் பிரிவில் இரண்டு வீதிகள் இன்று (13) அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளரும் கந்தளாய் பிரதேச அபிவிருத்தி குழு இனை தலைவருமான டொக்டர் அருண சிறிசேனவினால் ஆரம்பிக்கப்பட்டது.
இவ் வீதி அபிவிருத்தி பணிகளுக்கு 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.