கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் முள்ளிநியூஸ்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில்


கிழக்கு மாகாண  பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நாளை சனிக்கிழமை 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான ஐந்து தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.
இன்று காலை 9.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தலைமையில்  கோலாகலமாக இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவியேற்ற ரோகித்த போகலாகம அவர்களின் முதலாவது நிகழ்வாக இவ் விளையாட்டு நிகழ்வுகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மேலும், இதில் மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகம்மட,; மாகாண அமைச்சர்கள், சபையின் தவிசாளர், சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாணத்திற்குட்பட்ட 17 வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாகாணத்தின் 17 வலயக்கல்வி அலுவலகங்களின் கீழ் இயங்கும் பாடசாலைகளிலிருந்தும் ஐந்து தினங்களுக்கும் 3000 திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். கடந்த மேமாதம் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை திருகோணமலையில் பெரு விளையாட்டுக்களான செஸ், கரம் மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது. நோன்பு கால விடுமுறையைத் தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் 30 மற்றும் இம் மாதம் 11ஆம் திகதி வரை 12 தினங்களுக்கு திருகோணமலை, அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை, கல்குடா, மற்றும் பட்டிருப்பு ஆகிய கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்களில் ஆண், பெண்களுக்கான கிரிகெட், கூடைப்பந்து, கராத்தே, கபடி, பூப்பந்து, நீச்சல், கரப்பந்து, எல்லே மற்றும் உதைபந்து ஆகிய பெரு விளையாட்டுக்கள் கடந் 11ஆம் திகதி வரை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று முதல் மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

(இஹ்ஸானா பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW