திருமலையில் 4 மோட்டார் குண்டுகள் மீட்பு முள்ளிநியூஸ்

திருமலையில் 4 மோட்டார் குண்டுகள் மீட்பு

Image result for மோட்டார் குண்டுகள் மீட்பு

திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வான் ஆற்றிலிருந்து M60 ரக மோட்டார் குண்டுகள் நான்கு மீட்கப்பட்டுள்ளதாக வான்எல பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வான் ஆற்றுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் மோட்டார் குண்டொன்று சிக்கியுள்ளது. இது சம்மந்தமாக குறித்த மீனவர் வான்எல பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த ஆற்றுப் பகுதியில் பொலிஸார் தேடுதல் நடத்திய போது மேலும் மூன்று மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கந்தளாய் நீதிவான் நீதிமன்ற அனுமதியை பெற்று சூரியபுர விசேட அதிரடிப்படையின் உதவியுடன் நான்கு மோட்டார் குண்டுகளையும் இன்று புதன் கிழமை செயழிழக்க செய்யவுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW