மூதூர் மக்களின் வெற்றியில் பங்காளர்களாவோம்-கற்றுக் கொள்வோம் முள்ளிநியூஸ்

மூதூர் மக்களின் வெற்றியில் பங்காளர்களாவோம்-கற்றுக் கொள்வோம்


மூதூர் மக்களின் ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியின் பலனை வரலாற்றில் பதிவுசெய்துள்ளனர்.நாங்கள் பாராட்டுவதோடு அந்த மக்களின் வெற்றியில் பங்காளர்களாவோம்.ஆதவன் பாட்டைப் போட்டு அரசியல் அநாதையாக்கப்பட்ட சமூகத்தின் விடுதலை நாள்.பச்சோந்தி அரசியல் தலமைகளுககு செருப்புமாலைஅணிவித்த பொன்னான நாள்.எல்லாப் புகழும் இறைவனுக்கே!

பல்வேறு ஏமாற்றங்கள்,சூழ்ச்சிகளுக்கு மத்தியில் இந்த முயற்சியில் இறங்கிய இளைஞர்குழு பாராட்டப்படக்கூடியது.இவர்களே நாளைய மூதூரின் அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கும் முற்போக்கு தலைவர்கள்.

"::::: மிகவும் சாதூரியமாகவும்,திட்டமிட்டும் இவர்களால் பலகோணங்களில் இதற்கான முயற்சி நடைபெற்றது.எந்த அரசியல்வாதியும் தலையிடாத வகையிலும்,உரிமை கோராதவகையிலும் இவர்கள் செயற்பட்டனர்.குறிப்பாக ஐனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சுக்களுடன் நெருக்கமாக செயற்பட்டனர்.இதனால் விரும்பியோ,விரும்பாமலோ கிழக்கு முதலமைச்சரும்,சுகாதார அமைச்சரும் தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது.வெட்கம் கிழக்கு முதலமைச்சருக்கு கூட இறுதித்தருணம் வரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.மேலதிகமாக சிலகாரணங்களால் விரிவாக கூறமுடியாது.இதில் நிறைய இரகசியங்கள் நிறைந்துள்ளது.:::::::"

இந்த மக்கள் நிச்சயம் இதற்கு தகுதியானவர்கள் என்பதோடு உரித்துடையவர்கள்.இதனை எவரும் விமர்சிக்கவோ,உரிமை கோரவோ முடியாது.

ஆனால் நமது ஊரில் வைத்தியசாலை விடயம் உரிமை பிரச்சனைக்கு அப்பால்,பல உயிர்களை இழந்து நடக்கின்ற போராட்டம்.இந்தப் போராட்டம் எமது இளைஞர்களால் நியாயபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட போதும் கரடி புகுந்த கதைபோல அரசியல்வாதிகளால் தோற்கடிக்கப்பட்டத.எத்தனை அறிக்கை விட்டீர்கள்,எத்தனை படம் காட்டினீர்கள்,எத்தனை முறை பாதி மற்றும் முழு அமைச்சர்களைக் கொண்டுவந்து பந்தாபோட்டீர்கள்.

கிண்ணியா மக்களையும் உங்கள் மனச்சாட்சியையும் ஏமாத்தினீர்கள்.வெட்கம் ரோசம் இல்லாத உங்களால் எப்படி இன்னும் நாக்கைப் பிடுங்காமல் இருக்க முடிகிறது.உங்களுக்குத் தேவை கொமிஷன்.எங்கும் கமிஷன்.சிந்தனை முழுவதும் உங்களுக்கு இலாபமும் வருமானமும் உள்ள விடயத்தில் தான்.

மூதூர் வைத்தியசாலைக்கு எப்போது உரிமை கோரப் போகின்றீர்கள்??கடிதங்களையும்,படத்தையும் முகநூலில் போட்டு சண்டையிடப் போகின்றீர்கள்??!ஏதாவது சாட்டுப் போக்காவது கூறலாமே!!ரூம் போட்டு யோசிக்க வேண்டியதில்லையே!

கிண்ணியா மக்களுக்கு ரீல்விடுகிற மாதிரி மூதூர் மக்களால் கிடைத்த வெற்றிக்கு உரிமைகோர வேண்டாம்.மிகவும் அசிங்கப்பட வேண்டிவரும்.

உண்மையில் கிண்ணியா மக்கள் எமது உறவுகளுக்கு இன்று கிடைத்த அங்கீகாரத்தை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.ஏனெனில் மூதூர் இளைஞர்களது போராட்டம் இல்லையென்றால் மாவட்டத்திற்கே கிடைத்திராது.ஆகவே எங்களுக்கு கிடைத்ததாக மனநிம்மதி அடைவோம்.

இனிமேல் இந்த முகநூளில்

1)மாட்டைப் பிடித்தேன்,புழுக்கத் திண்டேன்,புனனாக்குப் போட்டேன் என்று எந்த அரசியல்வாதியும் பதிவிட வேண்டாம்.

2)மற்றவரை தாக்குவதையும் ஆதாரங்களை வெளியிடுவதையும் நிறுத்தி சுவரில் தலையை நீங்களாகவே முட்டுங்கள்.

3)முகநூளில் அல்லக்கைகளை வைத்து பந்தா நடத்துவதை நிறுத்தி,அவர்களை ஊருக்குள் பிச்சை எடுக்க அனுப்புங்கள்

4)போலியாகவும்,முகத்தைக் காட்டியும் அரசியல்வாதிகளுக்கு வாலாட்டும் அன்புக்குரிய உறவுகளே இனிமேலாவது நிறுத்துங்கள்.உங்கள் ஆசிரயரை,பெற்றோரை மற்றும் பெருமானாரைப் புகழுங்கள்.இந்த புழுத்துப் போனதலமைகளை புகழ்ந்து,அவர்களுக்காக சண்டையிட்டு பாவத்தையும் சாபத்தையும் தேடவேண்டாம்.

நிச்சயமாக மூதூர்மக்களின் வெற்றி எமக்கும் வெற்றியே.இதன் மூலம் நாங்கள் இனிமேலாவது ஒன்றுபட வேண்டும்!அரசியல்வாதிகளால் ஏமாறக்கூடாது என்ற செய்தி கிடைத்துள்ளது.
ஏனெனில் அரசியல்வாதிகளால் மிகவும் சூன்யமாக்கப்பட்டு சுகபோகத்துக்காக மக்கள் பலியாகும் நமது மண்ணுக்கு தேவை ஒற்றுமையும் மாற்றமுமே.எத்தனை பேர் எத்தனைமுறை முயற்சித்தாலும் சதிகளைச் செய்து நாம் தோற்கடிக்கிறோம்.அரசியல்வாதிகள் நம்மை கோமாநிலையில் வைத்து தலமுறைக்கும் சீரழிவதற்கு நன்றாக பழகிக் கொண்டார்கள்.

3அமைச்சர்,மாகாணசபை உறுப்பினர்,திணக்கள தலைவர்கள்,பணிப்பாளர்கள்,சுகாதார அமைச்சு இணைப்பாளர் என்று ஒருபட்டாலம் இருந்தும்,,இருக்கின்ற ஒருமாகாணசபை உறுப்பினருக்கு கூட கடைசிவரை தெறியாமல் வெற்றிகண்ட மூதூர் மக்கள் வரலாற்றுச் சாதனையாளர்களே.

நமது ஊரில் ஒற்றுமையை விரும்பும் எவரும்
முகநூலில் அரசியல்வாதிகள் மற்றும் அல்லக்கைகளின் வெட்கமில்லாததும் மக்களை மடையனாக்கும் பதிவுகளை புறக்கணியுங்கள்.இவர்களுக்காக விவாதிக்கவோ மற்றவர்களை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்இந்த அரசியல்வாதிகள் நமக்கு மட்டுமல்ல நமது அடுத்த தலமுறைக்கும் சாபக்கேடு.

நமத ஊரில் முற்போக்குடன் சிந்திக்கும்,செயற்படும் இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.அவர்களை ஊக்குவிப்போம் நமக்கான தலைவர்களாக உருவாக்குவோம்.இருக்கின்ற அரசியல் தலமைகளை முற்றாக அருவடை செய்ய நாட்கள் அதிகம் தேவை.ஆனால் இளைஞர்களை முன்னிலைப்படுத்தி,எமது ஒற்றுமை மூலம் இந்த அரசியல் தலமைகளுக்கு சாகுமணி அடிப்போம்.

இந்த தருணத்தில் எமக்குள் ஒற்றுமையும் சுயசிந்தனையும் வரவேண்டும்.இதுதான் எமக்கான இறுதி சந்தர்ப்பம்.இயலுமானவரை உழைத்து,மக்கள் காதுகளில் பூச்சூடி கோடிஸ்வரனாக வாழ்கின்ற அரசியல் தலமைகளிடம் இருந்து மக்களைப் பாதுகாப்போம்.நம்மை நாமே திருத்துவதற்கு ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பமாக இந்த மக்களின் வெற்றியில் இருந்து பாடம் கற்பிப்போம்.

மூதூர் மக்கள் எங்கள் உறவுகள்,.எமது அரசியல் மற்றும் உறவுமுறைகளில் ஒன்றாகக் கலந்த உறவுகள்.அவர்கள் தங்களுக்கு உரியதை தாங்களாகவே அடைந்து கொண்டார்கள்.நாங்கள் இருக்கின்ற வைத்தியசாலையையாவது பாதுகாப்போம்.

Note:
இதில் நிறைய இரகசியங்கள் நிறைந்துள்ளது.தேவையென்றால் நமது தலமைகள் முக்காடு போட்டு மூதூர் இளைஞர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.ஆனால் இது தரம் உயர்வு மட்டுமே.எந்தக் கட்டிட நிதி ஒதுக்கீடும் இல்லாத அபிவிருத்தி.no contract - no commission

இது எமது ஒற்றுமைக்கான நேரம்
துரோகிகள் அடையாளம்காணும் தருணம்
குனிந்து வாழ்வதற்கு
விடுதலை வழங்கும் தினம்

நாம் வரலாற்றில் தோற்கவில்லை
நமது தலைவர்களின்
அதிகார வெறிக்காக
வரலாற்றில் தோற்கடிக்கப்பட்டோம்
வரலாற்றில் தூரமானோம்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW