முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் வாழும் வரிய குடும்பங்களுக்கு வீட்டுக்கடன் பத்திரம் Dr. அருண சிறிசேன அவர்களினால் வழங்கி வைப்பு முள்ளிநியூஸ்

முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் வாழும் வரிய குடும்பங்களுக்கு வீட்டுக்கடன் பத்திரம் Dr. அருண சிறிசேன அவர்களினால் வழங்கி வைப்பு

முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் வாழும் வரிய குடும்பங்களுக்கு வீட்டுக்கடன் பத்திரம் Dr. அருண சிறிசேன அவர்களினால் வழங்கி வைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளரும், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ வைத்தியர் அருண சிறிசேன அவர்கள் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் நீர்மாணத்துறை அமைச்சருமான கௌரவ சஜீத் பிரேமதாச அவர்களின் மூலமாக கந்தளாய், பேராறு, சேருவில, தம்பலகாமம், சாலியபுர, முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் வாழ் மக்கள் 200,000 (இரண்டு இலட்சம் ரூபா) வீட்டுக் கடன் பெறுவதற்கான பத்திரம் இன்று (30) வழங்கப்பட்டது.

இப்பத்திரங்கள் டொக்டர் அருண சிறிசேன அவர்களின் இல்லத்தில் வைத்து 260 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இக்கடனைப் பெறுவதற்கான இலகு முறையிலான வழிமுறைகளும் முன்வைக்கப்பட்டன.

அடுத்த கட்டமாக வரிய குடும்பங்களுக்கு சீமெந்தும் மற்றும் (30,000) முப்பதாயிரம் ரூபாவும் வழங்க உள்ளதாக டாக்டர் அருண சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இதன்போது கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் கந்தளாய் இலங்கை வங்கி அதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர் .

முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் வாழ்மக்கள் Dr. அருண சிறிசேன அவர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW