110 வறிய குடும்பங்களுக்கு 5,50,00,000. இலட்சம் ரூபா வீடமைப்பு மானியமாக வைத்தியர் அருண சிறிசேன கையளிப்பு. முள்ளிநியூஸ்

110 வறிய குடும்பங்களுக்கு 5,50,00,000. இலட்சம் ரூபா வீடமைப்பு மானியமாக வைத்தியர் அருண சிறிசேன கையளிப்பு.



திருகோணமலை மாவட்டத்தில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 110 பேருக்கு வீடமைப்பு மானியமாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 இலட்சம் ரூபா நிதியினை இன்று (25) சேருவல தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வைத்தியர் அருண சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ, கோமரங்கடவெல , ரொட்டவெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 110 வறிய குடும்பங்களுக்கு இந் நிதி மானியமாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் நீர்மாணத்துறை அமைச்சர்.கௌரவ சஜீத் பிரேமதாச அவர்களின் உதவியுடன் இந் நிதி பெற்றுக் கொள்ளப்பட்டது.

"ஐக்கிய தேசியக் கட்சியை தோல்வியடையச் செய்தாலும்,
அதனை சார்ந்தவர்கள் சேவையை  செய்து கொண்டே இருப்பார்கள்".

இதன்போது மொரவாவ பிரதேச சபை உறுப்பினர் ஜெனீர் , சம்பத், மொரவாவ றிஸ்வான், குணவர்த்தனபுர தனுஸ்கே ஆகியோரும் மற்றும்
ஒருங்கிணைப் பாளர்களும்   ஆதரவாளர்களும் பொது மக்களும் கலந்துகொண்டனர் .

பொது மக்கள் டொக்டர்  அருண சிறிசேன அவர்களை  மனதார வாழ்த்தி சென்றார்கள்.































செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW