மொரவெவ பௌத்த விகாரைக்கு 20 இலட்சம் ரூபா ஒதுக்கீடு. வைத்தியார் அருண சிறிசேனவின் முயற்சிக்கு பலன்

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பௌத்த விகாரைக்கு தூபி ஒன்றை அமைப்பதற்கான 20 இலட்சம் ரூபாவுக்கான காசோலை வழங்கப் பட்டுள்ளது.
இதனை சேருவலத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான டொக்டர் அருண சிறிசேன இன்று (25) வழங்கி வைத்தார்.
சேருவலத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான டொக்டர் அருண சிறிசேன கேட்டுக் கொண்டதற் கிணங்க இதற்கான நிதியை
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் நீர்மாணத்துறை அமைச்சர்.கௌரவ சஜீத் பிரேமதாச வழங்கி வைத்தார்
மொரவெவ வாழும் பௌத்த மக்கள். மற்றும் மதிப்புக்குறிய விகாராதிபதி அவர்களின் வேண்டுகோளுக்குகிணங்க.
மொரவெவ பௌத்த விகாரையை விஸ்த்திரப் படுத்தி தூபியை 35 அடிவரை உயர்த்த 2 மில்லியன் ரூபா கௌரவ வைத்தியர் அருண சிறிசேன அவர்கள் முயற்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது
இதன் போது மொரவவெ பிரதேச சபை தவிசாளரும் மொரவவெ பொலிஸ் அத்தியச்சகரும், மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தரும்,பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.


