சமட்ட செவன என்னும் வேலைதிட்டத்தில் கந்தளாய் மதரஸா சந்தியில் 26 வீட்டுக்கு அடிக்கல் நட்டு வைப்பு. முள்ளிநியூஸ்

சமட்ட செவன என்னும் வேலைதிட்டத்தில் கந்தளாய் மதரஸா சந்தியில் 26 வீட்டுக்கு அடிக்கல் நட்டு வைப்பு.


திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் சேருவிலத் தொகுதியில் மதரஸா சந்தியில் இன்று (15) திகதி காலை முதல் 26  வீட்டுக்கு அடிக்கல் நட்டுவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் நீர்மாணத்துறை அமைச்சர்.
கௌரவ சஜீத் பிரேமதாச அவர்களின் சமட்ட செவன வேலைத் திட்டத்தின் கீழ்   இந் நிதி வழங்கி வைக்கப்பட்டது.

திருமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சின் கண்காணிப்பாளரும் கிழக்கு மாகாண அமைப்பாளருமான  இம்ரான் அவர்களும்.
சேருவிலத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வைத்தியர் அருண சிறிசேன ஆகியோர் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இந் நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினரின் செயளாலர் சதாத் கரீம், கந்தளாய் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், சுபார்கான்,முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ரத்ன வண்ட, கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரி சமன்,
ஒருங்கிணைப்பாளர் சல்மான் ,காதர் மற்றும் ஆதரவாளர்கள்,  பொது மக்கள் என கலந்து கொண்டனர்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW