திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹெரிசன்.தலைமையில் ஒன்று கூடல் முள்ளிநியூஸ்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹெரிசன்.தலைமையில் ஒன்று கூடல்



திருகோணமலை மாவட்டத்தில்
இன்று (29)திகதி சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹெரிசன்.தலைமையில் ஒன்று கூடலின் போது,
வறுமையொழிப்புத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இச் சமுர்த்தி கொடுப்பனவு திட்டத்தில் புதிதாக திருகோணமலை மாவட்டம் முலுவதுமாக 38,000 குடும்பங்களை உள்வாங்கப் பட உள்ளதாகவும்,

மேலும் அமைச்சர் கூறுகையில் சமூத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனமாக்குவதாவும் ஓயிவூதியம் பெற்றுத்தருவதாகவும் இவ்வேளையில் தெரிவித்தார்.

 மாட்டு வண்டில்,முச்சக்கரவண்டி வைத்திருப்பவர்களின் சமூர்த்திகள் ரத்து செய்யப்படுகிறது அவர்கள் கடன் பட்டு படாத பாடுபட்டு கடன்களை அடைக்கின்றர்கள் இவர்கள் சமுர்த்தியை  இவர்களுக்கே கொடுக்கும் படி வேண்டிக் கொண்டார்,இதற்கு அமைச்சர் பதிளிக்கும் முகமாக பரிசீலனை செய்வதக பதில் இருந்தது.

இதன் போது
சேருவலத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை அமைப்பாளரும்,
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான டொக்டர் அருண சிறிசேன,திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மகரூப் அவர்கள்.
சமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே. தடல்லகே அவர்கள்.
சமூக வலுவூட்டல் அமைச்சரின் செயலாளர் சிறானி வீரகோன்,
திருமலை மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களும் காவல் துறையினர்கள் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.












செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW