நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் - இராஜாங்க அமைச்சர். முள்ளிநியூஸ்

நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் - இராஜாங்க அமைச்சர்.




அடுத்த மாதம் 25ஆம் திகதியன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறாது என்றும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்
என்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.பேலியகொடையில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்

நாடு முழுவதும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் 8 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.

இது நாட்டுக்கு சுமை என்பதால் எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

அந்த அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கருத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தேர்தலை தாங்கள் ஒத்திவைக்க விரும்பவில்லை என்றும் ஜனநாயக நாட்டில் தேர்தலை ஒத்திவைப்பது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்த அவர், விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவோம் என்றார். 

எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறாது.எனவும் நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று கூறமுடியும் என்றும் குறிப்பிட்டார்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW