காங்கேசன்துறை மற்றும்
காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக
படகுச் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார்
நிறுவனத்தின் (IndSriFerry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன்
நந்தகோபன் தெரிவித்துள்ளார
காங்கேசன்துறை மற்றும்
காரைக்கால் இடையே 4 மணி நேரங்களைக்
கொண்ட இந்தப் படகு சேவை மே 15 ஆம் திகதியளவில் ஆரம்பமாகும். காரைக்கால் துறைமுகத்தின் ஒப்புதலுக்காக
தற்போது காத்திருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் கப்பல் சேவையில்
பணியாற்றவுள்ள கப்பல் கப்டன் மற்றும் ஆறு பணியாளர்கள் அனைவரும் இந்தியர்களாவர்.
கப்பல் சேவை இந்தியக் கொடியின் கீழ் நடத்தப்படும். சேவையில் ஈடுபடவுள்ள கப்பல்
சிங்கப்பூரில் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் சர்வதேச
கடல்சார் தர நிர்ணயங்களைக் கொண்டது எனவும் நந்தகோபன் குறிப்பிட்டார்.
பயணிகள் கப்பல் சேவை
கட்டணமாக 50 அமெரிக்க டொலர்
மற்றும் வரி வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 120 முதல் 150 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்தக் கப்பலில்
பயணிக்கும் பயணிகள் தலா 100 கிலோ பொருட்களைக் கொண்டு செல்ல முடியும்.
இந்தப் படகில்
பயணிகளுக்கான உணவகம் ஒன்றும் இயங்கும். கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு முதல் மூன்று
மாதங்களுக்கு வரி இல்லாத பயணிகள் சேவையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம்
உறுதியளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, படகு சேவையை தொடங்குவதற்கு தேவையான அனுமதியை
இலங்கை அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. படகு சேவையை தொடங்குவது இந்தியாவே என
இலங்கைதுறை முகங்கள், கப்பற்றுறை
மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சி டி ல்வா
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கப்பல் சேவையை தொடங்குவதற்கு ஏதுவாக
காங்கேசன்துறை துறைமுகத்தில் சுங்கம், குடிவரவு திணைக்களம் ஆகியவற்றுக்குத் தேவையான கட்டங்களை
அமைக்கும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன.
பயணிகள் தங்குவதற்கு
வசதியாக துறை முகம் மேம்படுத்தப்படுகிறது. இவற்றுக்காக இலங்கை அரசு 150 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது எனவும் அமைச்சர்
நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW