கச்சதீவில் புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டது
இந்த சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயரதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு விட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாகவும் யாழ். மாவட்டச் செயலாளருக்கு யாழ். ஆயர் இல்லம் அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைப்பு நல்கிய கடற்படை உயரதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என்றும், ஆயர் இல்லம் அந்தக் கடித்தில் குறிப்பிட்டுள்ளது.
யாழ். ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் பி.ஜோசப்தாஸ் ஜெபரட்ணம், யாழ். மாவட்டச் செயலாளருக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதுடன், தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
யாழ். விசேட நிருபர்
