உக்ரைனுடனான போர்! 20,000 ரஷ்ய வீரர்கள் பலி: முக்கிய தகவல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடரும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 20,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் போரானது தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
போர் தொடர்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் கெர்பி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த 5 மாதத்தில் ரஷ்ய வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக கணித்துள்ளோம்.
மேலும் 80 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என கூறியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
