வீதியோரம் குளிர்பானம் விற்ற சிறுமி வேன் மோதி பலி! முள்ளிநியூஸ்

வீதியோரம் குளிர்பானம் விற்ற சிறுமி வேன் மோதி பலி!

வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்து கொண்டிருந்த 16 வயது சிறுமி ஒருவர், வேன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கத் தயாராகவுள்ள இந்த சிறுமி, மேலதிக வருமானம் ஈட்டுவதற்காக கட்டுனேரிய வீதியில் தும்மலதெனிய பிரதேசத்தில் குளிர்பானம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.




வேனின் சாரதியான 21 வயது இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் ஏற்கனவே மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டு, 2 மாதங்களுக்கு அவரது சாரதி அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW