ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண் அதிசயம்! முள்ளிநியூஸ்

ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண் அதிசயம்!

ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண் அதிசயம்!

இந்தியாவில் ஒரே பிரசவத்தில் பெண்ணொருவருக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த அங்கிதா என்ற பெண் அண்மையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது கருப்பையில் 5 குழந்தைகள் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்ததுள்ளது. எனினும், இது கடினமான பிரசவம் என்றும், தாயின் உயிருக்கு ஆபத்து எனவும் மருத்துவர்கள் அந்த பெண்ணை எச்சரித்துள்ளனர். அந்த பெண் இந்த பிரசவத்தை செய்து கொள்ள விரும்பியுள்ளார். 

தற்போது அங்கிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. 5 குழந்தைகளும் 7 மாத குழந்தைகளாக பிறந்துள்ளதுடன், குழந்தைகள் வழக்கத்தை விட எடை குறைவாக இருப்பதால் NICUவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்படி ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பிறப்பது 6.5 கோடி மக்களில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் அந்த 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள். இந்த தகவல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW