பல நோய்களுக்கு தீர்வு கொடுக்கும் வாழைப்பூ! எப்படி சாப்பிட வேண்டும்?
உணவுக்கு சுவை சேர்க்கும் பதார்த்தமாக பல வகையான காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம்.
அதில் பூ வகையை சார்ந்த சத்துகள் மிகுந்த வாழைப்பூ மிகவும் முக்கியமானது.
வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும்.
வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.
வாழைப் பூவை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகமாகும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
