65 பாடசாலை பேருந்துகளுக்கு தடை: பொலிஸார் அதிரடி நடவடிக்கை
அநுராதபுரம் நகரில் உள்ள 106 பாடசாலை பேரூந்துகளில் 65 பேரூந்துகள் பாடசாலை மாணவர்கள் பயணிக்க உகந்தவை அல்ல என அநுராதபுரம் போக்குவரத்து பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அநுராதபுர நகரில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான பேரூந்துகளை பொலிஸார் திடீரென நேற்று (25) சோதனையிட்டனர்.
இதன்போது, சில பேரூந்துகளின் இயக்கம் மற்றும் பாதுகாப்புக்கு இடையூறாக பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்கள், அதிகமான ஒலியை எழுப்பும் ஹோர்ன்களை அகற்ற வேண்டும் எனவும் பேருந்துகளின் சாரதிகளுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்தனர்.
அதன்படி, அநுராதபுரம் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளால் 106 பேரூந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு 36 பேரூந்துகளுக்கு சிறு குற்றங்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு உகந்ததல்லாத 65 பேரூந்துகளுக்கு பொலிஸார் தடை விதித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
