இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியுடன் கூடிய அரசியல் அகாடமி
நாட்டில் இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியுடன் கூடிய அரசியல் அகாடமியை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இளைஞர்களை அரசியலுக்கு பயன்படுத்தும் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களை புதியதொரு பாதைக்கு இட்டுச் செல்வது தொடர்பான கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் நேற்று (26) நடைபெற்றது.
அரசியல்வாதிகள் இன்றி இளைஞர்களுக்கு உரிய இடத்தை பெற்றுக்கொடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் பணிகளுக்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்முயற்சியின் கீழ் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியுடன் கூடிய அரசியல் அகாடமியை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இளைஞர் சேவை மன்றத்தின் சேவைகளை சர்வதேச மட்டத்தில் இருந்து கிராமம் வரை விஸ்தரிப்பதற்கு புதிய வழிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இக்கலந்துரையாடலில் முதற்கட்டமாக 15 இலட்சம் இளைஞர்களை இணைத்து அவர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை விரைவாக ஏற்பாடு செய்து தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
