ATM இயந்திரத்தை உடைத்து திருட்டு முள்ளிநியூஸ்

ATM இயந்திரத்தை உடைத்து திருட்டு



வீரவில நகரில் பொருத்தப்பட்டிருந்த அரச வங்கியொன்றுக்குச் சொந்தமான தன்னியக்க பண பரிமாற்ற (ATM) இயந்திரத்தை உடைத்து கொள்ளையிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் அங்கு பொருத்தப்பட்டிருந்த அவசர சமிக்ஞை நேற்று (17) அதிகாலை 2.50 மணியளவில் ஒலியெழுப்பியது.

இதையடுத்து பொலிஸ் குழுவொன்று உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்துள்ளது. பொலிஸார் வருவதைக் கண்ட கொள்ளையர் தப்பிச் சென்றுள்ளனர். 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW